புதுவருட காலத்தில் போலி நாணய தாள்கள் புழக்கத்தில் வரலாம் - பொது மக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை !

 


இந்த வருடத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸாரினால் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், நாட்டின் பல பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்கு சிலர். முற்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்..

மேலும் பணக் கையாள்கையின் போது நாணயத்தாள்களில் மாற்றம் இருந்தால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.