சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எனினும், அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.