மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பள்ளிவாசல்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இன நல்லிணக்கத்திற்கு எடுத்து க்காட்டாக பல இப்தார் நிகழ்வுகளும் இம்முறை இடம்பெற்றது -மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடத்தில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு இவரிடம் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய ஐந்து கடமைகளில் முக்கியமான நோன்பினை நோற்று இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பல இப்தார் நிகழ்வுகளும் இம்முறை இடம்பெற்றது
இதேவேளை நோன்பு பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பள்ளிவாசல்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்த ப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் நோன்புப் பெருநாள் பாதுகாப்பு சம்பந்தமாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்