கிழக்கு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் பூர்த்தி செய்த தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு "கனவு மெய்ப்படுகின்றது" எனும் தொனிப்பொருளில் வளவாளர் நளினி ரத்ன ராஜாவினால் செயலமர்வு ஒன்று முன்னெடுக்கப்ப்ட்டது. .

 










 கனவு மெய்ப்படுகின்றது கருப்பொருள் நேர்மறையாக சிந்திப்பதன் மூலம் நமக்குப் பிடித்த ஆரோக்கியமான நிறைந்த பொருளாதாரத்துடன் ஆன நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கின்றது என்பதை அறியப்படுத்துவதாகும் . அந்த வகையில் இந்த பயிற்சியானது பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் பல்வேறு பீட மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது.  அதன் தொடர்ச்சியாக அண்மையில் முதலாம் தேதி சித்திரை மாசம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் பூர்த்தி செய்த தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு கனவு மெய்ப்படும் கருப்பொருளின் காரண கர்த்தா நளினி ரத்ன ராஜாவினால் வழங்கப்பட்டது.  இந்த பயிற்சியில் தியானம் செய்யும் முறை மூச்சுப்பயிற்சி ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கு  துல்லியமாக அவதானிப்பதற்குரிய எளிய முறைகள்  முத்திரைகள், ஆழ் மனதில் பதிந்திருக்கும் எதிர்மறையான சிந்தனைகளை மாற்றும் முறைகள் போன்றன கற்றுக் கொடுக்கப்பட்டன.  
 ஒரு இலகு முறையான திட சங்கல்பம் சொல்லும் பயிற்சி போன்றவையும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. சிந்தனைக் இருக்கும் ஆற்றல் பற்றி விஞ்ஞான ரீதியாகவும் மெஞ்ஞான ரீதியாகவும் விளக்கம் நளினியால் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் எவ்வளவுதான் கற்றிருந்தாலும் எவ்வளவுதான் விடயங்களை தெரிந்து வைத்திருந்தாலும் அவற்றை நமது வாழ்க்கையில் நாங்கள் கடைப்பிடிக்காவிட்டால் அவை உபயோகமற்ற போய்விடுகின்றது.   நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு சில யுத்திகளை பாவித்து நாங்கள் நேர்மறையாக இருப்பதற்கு முயற்சி செய்தால் மட்டுமே எங்களுடைய எதிர்மறை சிந்தனைகளை மாற்ற முடியும்.
மனமே எல்லாம் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்படி அதை செய்வது என்று கற்றுக் கொடுப்பதுதான் இந்த பயிற்சியும் அடி நாதமாக இருக்கின்றது. " நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய். நீ உன்னை வலிமை படைத்தவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் .உன்னால் முடியாத காரியம் ஒன்று இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே" என்று விவேகானந்தர் சொல்லியிருக்கின்றார்.  ஆமாம் மனிதன் கற்பனை பண்ணினால் நம்பினால் அவனால் செய்து முடிக்க முடியாத காரியம் ஒன்று இல்லவே இல்லை. சிந்தனையை மாற்றுவோம் வாழ்க்கை மாறும். இந்த பயிற்சியை ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு தொழில் முனைவோருக்கு மற்றும்  யாவரும் இந்த பயிற்சியை பெற்றுக் கொள்ளலாம்.  நீங்கள் விரும்பினால் தொடர்பு கொள்ளவும் nalini.fce@gmail.com.