கமு/திகோ/ அக்கரைப்பற்று இராமகிருஷ்ண சங்க மகா வித்தியாலயத்தில் சுய ஊக்குவிப்புப் பயிற்சிகள் நடைபெற்றன.













 "வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skills for Success - S3) எனும் தலைப்பில் க.பொ.த.( உ/த) மாணவர்களுக்கும் மாணவ முதல்வர்களுக்கும் "சிறந்த பெறுபேறுகளுக்கான குழு முயற்சி" (Team Effort for Better Results - TEBR) எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்கும் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சிகளை சர்வதேச அனுபவம் வாய்ந்த தொழின்முறை பயிற்றுவிப்பாளர் முனைவர் துரைராஜா பிரஷாந்தன் அவர்கள் வழங்கினார்.

KTP Consultancy & Training நிறுவனத்தின் 607வது & 608வது   தொழின்முறைப்  பயிற்சிகளாக இவை இலவசமாக

அறிமுக நிறைவுரைகளை பாடசாலையின் பிரதி அதிபர்  கப்டன்.க.ஜனார்த்தன்   அவர்களும்,
 மாணவர்களுக்கான தொடக்க  உரையை   கல்லூரியின் அதிபர்  திருமதி.R.நித்தியானந்தன் அவர்களும் ஆற்றினர்.

24வது படையணி பொதுக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி Wipula Chandrasiri அவர்கள் பணி ஓய்வு பெறும் வேளையில் அவரது சமூகப் பணிகளைப் பாராட்டி, இவ்விரு இலவசப் பயிற்சிகளும்  KTP Consultancy & Trainning நிறுவனத்தின் தனிநபர் சமூகப் பொறுப்புணர்வு (PSR - Personal Social Responsiblity) நடவடிக்கைகளாக வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

பாடசாலை சமூகத்தால் வளவாளர் Dr.K.T.Prashanthan அவர்களும் Maj.Gen.Wipula Chandrasri அவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.

சாட்டுக்களைச் சொல்லி வளவாய்ப்புக்களைத் தட்டிக்கழிக்காது தொலைநோக்குப் புத்தாக்கத் தலைமைத்துவத்துடன் செயற்பட்ட அனைவரினதும் உயர் பண்பு பாராட்டுக்குரியது.

பல பாடசாலைகள் KTP Consultancy & Training நிறுவனத்தின் பயிற்சிகளை வேண்டினாலும் அனுசரணைகள் பெரிதும் அவசரமாய் அவசியமாய் தேவை. நல்லுள்ளங்கள் அனுசரணகளுக்கு  +94715650258 என்ற WhatsApp இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.