தமிழ் வருடங்களில் 38-வது வருடமான சுப மங்களகர குரோதி என்னும் நாமத்துடன் பிறந்திருக்கும் தமிழ் புத்தாண்டானது சிறப்பான ஒரு வருடமாக அனைவருக்கும் அமைய வேண்டும்.
உலக மக்கள் அனைவரும் கடந்த தசாப்த காலமாகபல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளோம். அதில் குறிப்பாக எமது நாட்டு மக்கள் இன்னோரன்ன துயரங்களைத் தாங்கி சகித்து வாழ்ந்து வருகின்றனர்.
அனைத்து சமயங்களும் வாழ்வியலை வழிகாட்டி சுட்டி நிற்கின்ற அதே வேளையில் எமது சமயமானது அன்பு, கருணை ,கொல்லாமை ,பிறருக்கு தீங்கு செய்யாமை ,புரிந்துணர்வு போன்ற நற்செயல்களை சுட்டி நிற்கிறது இவை போன்ற விடயங்கள் தொலைத்துவிட்டோம் என்கின்ற காலப்பகுதியிலே நாம் அனைவரும் இருக்கிறோம் .
நாம் எமது குடும்ப உறவுகளிடம் அன்பு செலுத்துவது போல் ஏனைய இனத்தார், சமூகத்தினர், சமயத்தாருடன் அன்பு செலுத்துதல் வேண்டும். மேலும் ஒவ்வொருவருடைய தனித்துவ பண்பாட்டினை மதித்துப் போற்றுதல் வேண்டியது சிறப்பானதும் பிரதானமான ஒன்றாக காணப்படுகிறது.
அதனோடு தமிழ் மக்களாகிய நாம் எமது தேசத்தில் தொடர்ந்தும் வழிபாட்டு சுதந்திரம் உள்ளிட்ட பல சிக்கல்களை சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற் கூறிய அனைத்து நற்குணங்கள், ,விடயங்களை எம் தேசத்து அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும்.
நாம் தமிழ் சிங்கள புத்தாண்டை அரச விடுமுறையுடன் இரு இனங்களும் மகிழ்வாய் கொண்டாடுகின்றோம் அதனைப்போல ஒவ்வொரு கணமும் அமைய வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் அமைய வேண்டும். மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டும்
புது வருடத்தில் நாம் அனைவரும் இறை பிரார்த்தனையுடன் கூடிய இன்பகரமான வாழ்வு அமைய வேண்டும் என பரம்பொருளை வேண்டி இறை பிரார்த்தனையில் ஈடுபடுவோம். இச்சமயத்திலே இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் வழிகாட்டுதலையும் நிறைந்த இறை பிரார்த்தனையும் நல்லாசிகளையும் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
சுபமங்களம்.
சிவாகமகலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.
சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.
செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு.