இரத்தோட்டை, வெல்காலயாய பகுதியில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (29) மாலை பெய்த கடும் மழையின் போது மின்னல் தாக்கியதில் வீட்டுக்குள் இருந்த சகோதரனும் சகோதரியும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.