(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தொடர்பான செயலமர்வு
உதவி மாவட்டச் செயலாளர் ஜி.பிரணவன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே. குணநாயகத்தின் ஏற்பாட்டில் நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (30) இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய பாடத்திட்டம் தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே. ஜெயராஜியால் வழங்கப்பட்டது.
புதிய பாடத்திட்டத்தில் காணப்படும் விடயதானங்கள் மற்றும் சவால்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.
அறநெறி புதிய பாடத்திட்டத்திற்கான பிரதான நூல்கள், துணை நூல்கள், செயல் நூல்கள் அறநெறி பாடசாலை பதிவேடு, ஆசிரியர் குறிப்பேடு, மாணவர் வரவு பதிவு தொடர்பான விளக்கங்கள் இச் செயலமர்வில் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் நாவற்குடா இந்து கலாசார நிலையப் பொறுப்பதிகாரி செல்வி மகாதேவா சுகன்யா, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.