மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் விநியோகம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும்

 


கல்வியாண்டு 2023/2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் விநியோகம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சை அனுமதி அட்டைகள் தனியார் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் அதேவேளை, பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர்கள் ஊடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.