பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கிழக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகமாக பரஞ்ஜோதி பிரபாகர் பதவியேற்பு!



(கல்லடி செய்தியாளர்)

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கிழக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகமாக பரஞ்ஜோதி பிரபாகர் அண்மையில் (01) தமது கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இயங்கிவரும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கிழக்கு வலய அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ள இவர் வடக்கு வலையத்தின் ஈ - திட்டத்தின் பிரதிப் பதிவாளர் நாயகமாக கடந்த மூன்று வருடங்களாக சேவையாற்றி வந்த நிலையில் கிழக்கு வலய பிரதி பதிவாளர் நாயகமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டு 2005 ஆம் ஆண்டிலிருந்து பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் யாழ்ப்பாண காணிப் பதிவாளர் ஆகவும் அதன் பின்னர் வடக்கு வலய உதவிப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்திருந்த நிலையில் கிழக்கு வலயத்தில் கடமையாற்றி வந்த பிரதிப் பதிவாளர் நாயகம் ஓய்வு பெற்றதன் பின்னர் நிலவிய வெற்றிடத்திற்கு பதிவாளர் நாயகமா நாயகம் திணைக்களத்தினால் இவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமது கடமையினை பொறுப்போற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.