கல்லடி செய்தியாளர்/பிரதான செய்தியாளர்
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அமிர்தகழி
கழகம் ஆகியன இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை (06)
அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்றது.
இவ்வைத்திய
முகாமில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர்
கிருஷ்ணமூர்த்தி டிலுசா , தாதியர் உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர்
கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது அமிர்தகழி
மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்குமார்,நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும்
அமிர்தகழி கழக உறுப்பினர்கள்,பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு
குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.