இலங்கையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவருக்கு நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டதால் இந்திய விமானப் படையின் ஹெலி அவரை மீட்டு சென்னை வைத்தியசாலையில் சேர்த்துள்ளது.
இலங்கையில் இருந்து புறப்பட்ட நீண்ட நாள் படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடன் சென்றவர்கள் நடுக்கடலில் உதவி கோரினர். இதனால் அதன் அருகே சென்ற இந்தியக் கடற்படையினர் தகவலை இந்திய விமானப் படையினருக்கு வழங்கினர்.
இதையடுத்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலி சம்பவ இடத்துக்கு வந்தது. அதில் இருந்த விமானப் படையினர் மேற்படி இலங்கை மீனவரை மீட்டு சென்னை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவரின் விபரம் உடனடியாகச் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.