ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான செயலாளர் பணிமனை மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதான வீதியில் 17.04.2024 மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான செயலாளர் ஜோன் கெனத் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் அக்கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மற்றும் மாவட்ட தலைவரு முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்தனர்.
இதன்போது கலந்து கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பிளர் நளின் பண்டாரவிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் குருக்கள்மடம் பொது அமைப்பினர் வழங்கி வைத்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த கட்சியின் ஆதரவாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.