வேன் ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து பாரிய விபத்துக்குள்ளானதில் பலர் இறந்திருக்கலாம் நம்பபப்படுகிறது

 


  இறம்பொடை-கொழும்பு பிரதான வீதியில் எல்பொடைக்கும், புஸ்ஸலாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று மாலை வேன் ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து பாரிய விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. சம்பவத்தில் விபத்துக்கு உள்ளான வேன் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு பத்து பேருடன் சுற்றுலாவுக்கு வருகைதந்து பின் கொழும்பை நோக்கி பயணிக்கையில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவத்தில் விபத்துக்கு உள்ளான வேனில் சிறு குழந்தைகளும் வயதானவர்களும் கூட இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விபத்தில் வேனில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பிரதேச மக்கள்,பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.