மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார பரிசோதகர்கள், களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை, மற்றும் அதனைச் சூழந்த பல வர்த்தக நிலையங்கள் திடீர் சுற்றிவழைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர்களினால் பல்வேறு வர்த்தக நிலையங்களில் பாவனைக்குதவாத மற்றும் காலாவதி திகதி நிறைவடைந்த பல பொருட்கள் கைப்பற்றபட்டதுடன், சுமார் 06 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அப்பகுதி சுகாதார பரிசோதகர் எஸ்.இளங்கோவன் தெரிவித்தனர்.
மேலும் சுகாதார விதிமுறைகளை பேணாத பல வர்த்தக நிலைகளுக்கு முதற்கட்ட எச்சரிக்கை கடிதங்களும் இதன்போது பொதுச்சுகாதாரப் பரிசோதகளர்களால் வழங்கப்பட்டன.