ஜப்பானின் ‘சிறுவர் நிதியம்’ (ChildFund Japan) 500 சைக்கிள்களை இலங்கை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

 


இலங்கையின் தொலைதூர பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் பாடசாலை வருகையை ஊக்குவிக்கும் வகையில், ஜப்பானின் ‘சிறுவர் நிதியம்’ (ChildFund Japan) 500 சைக்கிள்களை வழங்கியுள்ளது.

இந்த சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு   நேற்று   (01) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் பத்தரமுல்ல வாட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்றது.

மொனராகலை, புத்தளம் மற்றும் முல்லைத்தீவு போன்ற போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் 12 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 108 பாடசாலைகளில் 12 முதல் 16 வயது வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.