தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபா ரத்தினத்தின் 38-வது நினைவு தின நிகழ்வு









வரதன்

 இன்று மட்டக்களப்பு  தமிழீழ  விடுதலை இயக்கத்தின்   தலைமை அலுவலகத்தில் ஸ்ரீ  சபா ரத்தினத்தின்  நினைவு தின நிகழ்வு கட்சியின் செயலாளரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது

 அன்னாரது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு முன்னால் நினைவுச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்  மௌன அஞ்சலியும் இங்கு இடம் பெற்றது

 இந்நிகழ்விற்கு முன்னால் மாகாண சபை உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா உட்பட கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 அன்னாரது நினைவு தினத்தை முன்னிட்டு இங்கு கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களால் நினைவு பேருரையும் முன்னெடுக்கப்பட்டது.


எங்களால் நிறுத்தப்படுகின்ற  பொது  வேட்பாளர் ஜனாதிபதி யாக தெரிவு செய்ய மாட்டார் .   ஜனாதிபதி வேட்பாளருக்கா அல்லது    பொது வேட்பாளருக்கா      வாக்களிப்பது என நாம் ஒற்றுமையுடன் முடிவெடுக்க வேண்டிய காலம் இது  என்று   மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்  தெரிவித்தார்

நாம்  போராட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பல சந்தர்ப்பங்களை நழுவ விட்டுள்ளோம் அதில் ஒன்றுதான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஆகும்

வடகிழக்கு மக்கள் சோற்றுக்காக தான் போராடினார்கள் என்பது ஜனாதிபதி வேட்பாளர் அனுரா  குமார திசாநாயக்காவின்  கணிப்பாக உள்ளது .


 ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என எங்களை அழைத்து கூறியுள்ளார் .    தெற்கில் உள்ள மக்களுக்கும் அதனை தெரிவித்து அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திதிலும்  அதனை கொண்டு வர வேண்டும்  என்றார்