4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தம்

 


4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனம், ரக்பி சங்கம், மோட்டார் வாகன சம்மேளனம் மற்றும் வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகிய சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவுகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் மேலதிக பணிகளை முன்னெடுப்பதற்கும், அது தொடர்பான தேர்தலை நடத்துவதற்கும் உரிய அதிகாரியாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.