சட்டவிரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு அபராதம்.

 


சட்டவிரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேரடி இறக்குமதியின்றி, மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அத்துடன், சட்டவிரோத இறக்குமதியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றுக்கு 179 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.