மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு முதுநிலை பயிற்றுனருக் கான கணிப்பிடுகளை இளகு படுத்துவதற்கான தளம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவனினால் நேற்று (03) திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஷின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச பிரிவுகளிலும் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களினால் இளைஞர் யுவதிகளுக்கு கிராம, பிரதேச மட்டங்களில் போதைப் பொருள் பாவனையின் மூலம் ஏற்படும் பிரச்சினைகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமான செயற்திட்டத்தினை இவர்களினால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் வளவாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஷ்ட நிகழ்ச்சி அதிகாரி ஏ.சி.றஹீம், நிகழ்சி அதிகாரி எஸ். நிதர்சனா, மற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்