கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநராக பொறுப்பேற்று இன்றுடன் 1 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன்,அவர் தனது பணிகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காகவும் தொடர்ந்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது கடமைகளை திறம்பட செய்வதற்காகவும் தனது பாராட்டுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.
மேலும் செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்று ஒரு வருட காலத்தில்1.9 மில்லியன் பயனாளிகளுக்கு, 8.032 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்,2,695 வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது