இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு விஜயம்.









வரதன்


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு விஜயம் மேற்கொண்டு மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தியுள்ளார்.

நிகழ்வின் நிறைவில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கருத்து தெரிவிக்கையில்,
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இந்த மாதம் நடுப்பகுதிக்குள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும், இராமர் பாலம் அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம் பெற்று வருவதாகவும் கருத்து  தெரிவித்திருந்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரும், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமாகிய எந்திரி என்.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் உள்ளிட்ட மாநகர சமையின் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.