சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது .

 


சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின், கட்டுநாயக்க பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 31 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபா என தெரியவந்துள்ளது.