காசா எல்லைப் பகுதியை புனரமைப்பு செய்ய ஐந்தாயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் தேவை .

 


இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் காரணமாக கடந்த நாற்பது வருட காலமாக கல்வி, சுகாதாரம் அடங்கலாக சகல மனித அபிவிருத்தி பிரிவுகளிலும் காசா எல்லைப் பகுதியில் வசித்த மக்கள் பெற்றுக் கொண்ட முன்னேற்றம் இதுவரையில் அவர்களுக்கு இல்லாமல் போயுள்ளதுடன், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீண்டும் 1980 ஆம் ஆண்டை நோக்கி பின்னடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அரபு நாடுகளுக்கான வலய பணிப்பாளர் அப்துல்லா அல் தர்தாரி குறிப்பிட்டுள்ளார்.


இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஏற்பட்ட மாபெரும் அழிவாக இஸ்ரேல் தாக்குதலினால் காசா எல்லைப் பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும், அப் பகுதியை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கு ஐந்தாயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் செலவிட வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


காசா எல்லைப்பகுதியில் காணப்படும் வீடுகளில் சுமார் எழுபது சதவீதம் வரை அழிவடைந்துள்ளதாகவும், அதனால் சுமார் முப்பத்தியேழு டொன் எடையுடைய சேதங்கள் அப்பகுதிகளில் குவிந்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.