கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்ச வீட்டு (லைட் ஹவுஸ் ) பகுதிக்கு விஜயம்.

 
















FREELANCER

 .கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இன்று காலை   மட்டக்களப்பு  முகத்துவாரம் வெளிச்ச வீட்டு (லைட்ஹவுஸ் ) பகுதிக்கு  விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் .
110 வருடங்கள் பழைமை வாய்ந்த  வெளிச்ச வீடு.கடந்த  20வருடங்களுக்கு மேலாக வர்ணம் பூசாமல் பழுதடைந்த  நிலையில் இருப்பதை அவதானித்த  அமைச்சர் அவர்கள் உடனடியாக வர்ணம் பூசுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .
வெளிச்ச வீட்டுக்கும் நாவலடி கடற்டபகுதிக்கும் இடையே உள்ள ஏரிப்பகுதியை  ஆழப்படுத்தி தருமாறு  கடற்தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து  அத்தனையும் கவனத்தில் எடுத்த அமைச்சர் ஆழப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்குமாறு  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் .
வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசித்தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இருப்பது வருடங்களுக்கு மேலாக  பொதுமக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொது மக்களால் அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டது .