மயங்கி விழுந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் ஒருவர் ஒருவாரத்தின் பின் உயிரிழந்துள்ளார் .

 


மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய சிறுவன் புதன்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாழைச்சேனை, ஹைராத் வீதியைச் சேர்ந்த ஆசிப் ஷைபுல்லாஹ் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (24) அன்று மயங்கி விழுந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உணர்வற்ற நிலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த சிறுவன் புதன்கிழமை (29) மரணமடைந்துள்ளார்.

மேலும் சிறுவனின் உடல் வைத்திய பரிசோதனைகளின் பின்னர் வியாழக்கிழமை (30) பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.