freelancer
மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் சிறி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 2027 ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆலய புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வாக தெற்கு வாயில் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.
ரமேஸ்புரம் சிறி சித்திர வேலாயுத சுவாமி ஆலய தலைவர் க.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தெற்கு வாயில் கோபுரத்திற்கான உபயகாரர் சி.உதயகுமார், ஆலய நிர்வாக சபையினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி தெற்கு வாயில் கோபுரத்திற்கான நிதி உதவிகளை செங்கலடி ரமேஸ்புரத்தைச் சேர்ந்த வர்த்தகர் சி.உதயகுமார் அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.