மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் தாண்டியடி பிரதான வீதியில் உள்ள நீர் குழாய் கட்டமைப்பில் ஏற்ப்பட்டுள்ள நீர் கசிவானதுகடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெளியேறிய வண்ணம் உள்ளது.
இதனை சம்பந்தப்பட்ட திணைக்களம் பாராமுகமாக இருப்பதாக பிரதேச வாழ் போது மக்கள் ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர் .
இதே வேளை குறிப்பிட்ட திணைக்களம் இந்த பிரதேசத்தில் உள்ள ஏழை மக்கள் நீர் கட்டணம் கட்ட தவறும் பட்சத்தில் எந்த விதமான மன்னிப்பும் இன்றி நீர் விநியோகத்தை துண்டித்து விடுவதில் காட்டும் கரிசனையினை ஏன் இப்படியான விடயத்தில் காட்டுவது இல்லை?
நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்துள்ள வேளை இப்படியான பொறுப்பற்ற விதமாக
நடந்து கொள்வது ஏன் என்று பொது மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் .