யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியிலுள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனத்திறற்கு
ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் உள்ளிட்ட குழுவினர் இன்று விஐயம் செய்தனர்.
இதன்போது அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதோடு கடல் உணவு உற்பத்தி
நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு பணியாளர்களுடனும் கலந்துரையாடலில்
இக்குழு ஈடுபட்டது.
இதன் போது ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் நோர்வே
பாராளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு, தப்ரபேன் கடலுணவு
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திமோதி ஓ’ரெலி உள்ளிட்ட குழுவினர் வருகை
தந்திருந்தனர்.