இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது.
டெல்லி, உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பீகார் மாநிலம், ஷேக்பூராவில் உள்ள பள்ளி ஒன்றில் வெப்ப அலையின் தாக்கம் தாங்க முடியாமல் பள்ளி மாணவ, மாணவியர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவிகளுக்கு தண்ணீர் வழங்கி முதலுதவி வழங்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.