இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2 ஆயிரத்து 771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை, இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில், இலங்கையர்களுக்கு தாதியர், விவசாயம், நிர்மாணத்துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
அதற்கமைய, 409 பேர் தாதியர் சேவையிலும், 804 பேர் நிர்மாணத்துறையிலும், 1558 பேர் விவாசாயத்துறையிலும் பணியாற்றச் சென்றுள்ளனர்.
மேலும் 172 இலங்கையர்கள் மே மாதத்தின் முதல் வாரத்தில் விவசாயத்துறை வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு பயணிக்கவுள்ளனர் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.