ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னரும் கிழக்கு மாகாணத்தில் இன நல்லிணக்கத்துடன் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர் -மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன்

 














 வரதன்


 கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையே சமய நல்லிணக்கத்தின் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கை தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் சமய சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கிலான சர்வ சமய குழுக்களின் அனுபவ பரிமாற்று விஜயத்தின் அதன் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது


இதன் போது பண்டாரவளை மாவட்டத்தில் இருந்து பண்டாரவளை பிரதேச செயலாளர் தலைமையில் சகல மதங்களையும் உள்ளடக்கியதான இன நல்லிணக்க குழுவினரும்  சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு ஒன்றும் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்

 இதன்போது சமயங்களுக்கு ஊடாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது மட்டக்களப்பு மாவட்ட  கலாச்சார முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு சமயத் தலைவர்களின் ஆசிர்வாதத்தின் பின்  கலை கலாச்சார  அனுபவ பரிமாற்று  நிகழ்வுகளும் இங்கு இடம் பெற்றது


 இன்றைய இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து கொண்டதுடன் காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு வடக்கு பிரதேச செயலாளர் உட்பட மாவட்டத்தின் சமய தலைவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதி கள் பொதுமக்கள் என்ன பலரும் இன்றைய ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டதுடன். இந்த அனுபவ பரிமாற்று நிகழ்வு இன்றும் நாளையும் மட்டக்களப்பில் இடம்பெற உள்ளது.

இன்றைய  நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்