மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்ததை கண்டித்து நேற்று புதன் கிழமை மே தினத்தன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் பொது மக்கள் , மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் எதிப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்கள் அரச அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கலை உடன் நிறுத்து , வலயக் கல்விப்பணிப்பாளரின் இடமாற்றத்தினை உடனே ரத்து செய் போன்ற பதாகைகளை ஏந்தி இருந்தனர்