சர்வதேச தொழிலாளர் தினமான இன்று புதன்கிழமை அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாடுபூராகவும் 30 ற்கும் மேற்பட்ட கூட்டங்களையும் மற்றும் பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளன.
இந்த வருடம் தேர்தல் நடைபெறவுள்ளதால் பிரதான அரசியல் கட்சிகள் தமது
பலத்தை வெளிப்படுத்தும் நாளாக இன்றைய தினத்தை பயன்படுத்த
திட்டமிட்டுள்ளதால் ஏட்டிக்கு போட்டியாக மே தின கூட்டங்களையும்,
பேரணிகளையும் நடத்தவுள்ளன.
இதனால் இம்முறை மேதின கூட்டங்கள் அரசியல் பரபரப்புகளுடன் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டவையாக அமையவுள்ளன. இந்த கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் அதிகமானவை தலை நகர் கொழும்பிலேயே நடைபெறவுள்ளன.