தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதான தொழிலாளர் தின பேரணி .











 வரதன்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உலக தொழிலாளர் தின நிகழ்வு  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பிரதான பங்குபற்றலுடன்,கட்சியின் தொழிற்சங்க செயலாளர் திரு சே.தியாகராஜா அவர்களின் தலைமையில் முறக்கொட்டான்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது

சர்வதேச தொழிலாளர் தினம். இன்று கொண்டாடப்படுகின்ற நிலையில். நாடு பூராகவும். பல்வேறு நிகழ்வுகளும் பேரணிகளும். இடம்பெற்று வருகின்றன

 இதேவேளை. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின். பிரதான தொழிலாளர் தின பிரதான நிகழ்வு முறக்கொட்டான்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

 இதன் ஆரம்ப நிகழ்வாக. தொழிலாளர் தின ஊர்வலமானது.  கட்சியின் தலைமை  காரியாலயத்திலிருந்து ஆரம்பமாகி  நகரின் பிரதான இடங்களின் ஊடாக பயணித்து  முறக்கொட்டான்சேனை பொது விளையாட்டு மைதானத்தை நோக்கி பேரணி.ஆரம்பமானது.

கட்சியின் தலைவர் ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் ஆரம்பமான  இப்பேரணியானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்க. பிரதிநிதிகள். தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

 கட்சியின் ஆதரவாளர்களுடன் தொழிலாளர் உரிமைகளை குறிக்கும். பதாகைகளை ஏந்திய வண்ணம் முறக்கொட்டான்சேனை நோக்கி பயணித்தது பொது மைதானத்தில். இடம்பெற்ற உலக தொழிலாளர் தின பிரதான நிகழ்வில். கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை  பிரசாந்தன்  கட்சியின் முக்கிய அங்கத்தவர்களும் பொது மக்களும். கலந்து கொண்டனர்.