மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி புது மண்டபத்தடி பிரதான வீதியில் இருந்து கரையாக்கன்தீவு கிராமத்திற்கு செல்லும் முக்கிய வீதியே இவ்வாறு உடைந்து காணப்படுகின்றது. இவ் வீதியால் அதிகளவான பொதுமக்கள் பயணித்து வருவதோடு வாகன சாரதிகள் இரவு நேரங்களில் வீதியால் பயணி ப்பதற்கு பெரும் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளதாகவும் இவ் வீதியில் அதிகளவான விபத்துக்கள் இடம் பெறுகின்றதாகவும் கரையாக்கன் தீவு கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவ் வீதியை புணரமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.