மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (01) காலை நகர மண்டபத்தில் நடைபெற்றது.


















மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எந்திரி.ந.சிவலிங்கம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இடம்பெற்ற இம் மருத்துவ முகாமை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகத்தின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து நடாத்தியிருந்தனர்.

குறித்த வைத்திய முகாமில் நீரிழிவு, இரத்த அழுத்தம், தொற்றாநோய்கள் போன்றவற்றுக்கான பரிசோதனைகள் இடம்பெற்றதுடன் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் த.டமராஜ், சுகாதார பிரிவின்பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் டி. ரூபாகரன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.