ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் 08 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தட்சணாமருதமடு பகுதியில் நேற்று (28) பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு விதையை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதுடன் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.