இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில்10 ஆவது சர்வதேச யோகா தினம் திருகோணமலை மெக்கேயர் மைதானத்தில் இன்று(14) இடம்பெற்றது.
இந்நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றதுடன், யாழ்ப்பாண இந்திய உயர் ஸ்தானிகர் சாய் முரளி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் 2500 யிற்கும் மேற்பட்ட யோகாசன மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.