(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலய வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகமும் பன்னீர்குட பவனியும் வியாழக்கிழமை (30) இடம்பெற்றது
மட்டக்களப்பு நகரில் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலயத்தின் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகமும் பன்னீர் குட பவனியும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவத்திரு ல. சதுரசன்சர்மா குருக்களின் தலைமையில் இடம்பெற்றது .
இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ ஆலயத்தின் உற்சவகால குரு ஈசான சிவாசாரியார் சிவஸ்ரீ இரா கு அருளானந்தம் குருக்களின் தலைமையில் விநாயகர் வழிபாடுகளுடன் விசேட அபிசேக தீபாராதனை இடம்பெற்று சின்ன ஊறணி மாவடிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து அடியார்கள் புடைசூழ வேத நாத மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோஷங்களுடன் பன்னீர்குடம் பவனியாக எடுத்து வரப்பட்டு பால முருகப் பெருமானுக்கு பன்னீர் அபிஷேகம் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து வருஷாபிஷேகமும் 1008 சகஸ்ர நாம சதா சங்காபிஷேகமும் இடம்பெற்றது .
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலய வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இடம்பெற்ற 1008 சங்காபிஷேக வழிபாடுகளை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, ஆலய வருஷாபிஷேகம் சிறப்பாக நிறைவு பெற்றது.