12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது

 


லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680 ரூபாவாகும்.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.