நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பலர் உயிரிழந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதுவரை அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்த அனர்த்தங்களால் 5,492 குடும்பங்களைச் சேர்ந்த 19,669 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்போது சொத்துக்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.