2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும்

 


 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்கலாக 452,979 பரீட்சார்த்திகள் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றியதாக அவர் கூறினார். க.பொ.த (சா/த) பரீட்சைகள் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்றன.