FREELANCER
கிழக்கு மாகாணத்தில் சக்தி வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு - புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கானது ஞாயிற்றுக்கிழமை 2024.06.02 இரவு ஏழு மணிக்கு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி அதன் பின்னர் அம்பாள் எழுந்தருளப்பண்ணலுடனும் பூஜைகள் ஆரம்பமாக உள்ளது .
ஆலயத்தில் தொடர்ச்சியாக பகல்,இரவு பூஜைகள் நடை பெற உள்ளதோடு
2024.06.05 அன்று புதன்கிழமை கல்யாணக்கால் வெட்டும் வைபவம் வீதிவலமாக இடம் பெறும்.. .
2024.06.07 அன்று வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள்,வேதாதிகள் புடைசூழ்ந்து ஆலயத்தில் பிற்பகல் 4.00மணியளவில் தீ மிதிப்பு வைபவம் இடம் பெற உள்ளது .
தீ மிதிப்பு வைபவம் நிறைவடைந்ததுடன் அன்னதானக்குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட உள்ளது , அதன் பின்னர் இடம் பெறும் பூசைகளுடன் திருச்சடங்கு இனிதே நிறைவு பெறும் .