FREELANCER
2023 ஆண்டுக்கான க .பொ. த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்
.11 மாணவிகள் 3A பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்
கடந்த வருடம் இடம் பெற்ற உயர்தர பரீட்சைக்கு 260 மாணவிகள் தோற்றி இருந்தனர், இவர்களில் 213மாணவிகள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க உள்ளனர்
மருத்துவத்துறைக்கு 11 மாணவிகளும்,பொறியியல் துறைக்கு 6 மாணவிகளும், முகாமைத்துவம் மற்றும் கலைத்துறைக்கு 15 மாணவிகளும் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளனர் .
சாதனை படைத்த மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் அதிபர் உதயகுமார் தவத்திருமகள் தலைமையில் இடம் பெற்றது
பிரதம அதிதியாக மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார் .வகுப்பாசிரியர்கள் மற்றும் ,பாடத்துறைக்கு பொறுப்பான ஆசிரியர்களும் இன்று கௌரவிக்கப்பட்டார்கள்