(
(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர்)
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க
மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு
பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ பக்திபூர்வமாக நடந்தேறியது.
இதன்போது
பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றும்
பொருட்டு தீமிதிப்பில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.
அத்தோடு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பக்த அடியார்களும் தீமிதிப்பில் ஈடுபட்டமை சிறப்பம்சமாகும்.
இந்நிலையில்
இவ்வாலய உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) திருக்கதவு திறத்தலுடன்
ஆரம்பமாகி,இன்று வெள்ளிக்கிழமை (07) தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெற்றது
குறிப்பிடத்தக்கது.