ஆப்கானிஸ்தான் படகு விபத்தில் குழந்தைகள் உட்பட 20 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 


கிழக்கு ஆப்கானிஸ்தானில் படகு விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டு ஆற்றின் ஊடாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் 5 பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

காணாமல் போனவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை மீட்பதற்கான விசேட நடவடிக்கையை அந்நாட்டு மீட்புப் பிரிவினர் முனனெடுத்துள்ளனர்.