தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இனந்தெரியாத திரவம் ஒன்றை அருந்தியதால் 3 உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (28) இரவு கடலில் மிதந்து வந்த போத்தல்கள் சில இவர்களுக்கு கிடைத்துள்ள நிலையில், அதனை மதுபானம் என நினைத்து அருந்தியுள்ளனர்.
இதில் மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட “டெவோன்” என்ற பல்நாள் மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.