இன்று நிம்மதியுடன் வாழுகின்றார்கள் என்றால் அது ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் தான் நடக்கும்- இரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன்

 

 

 


 வரதன்

 

தற்போது உள்ள ஜனாதிபதி நாட்டைக் காப்பாற்றுவதுடன் மக்களையும் வாழ வைத்து தான் அவருக்கு பழக்கம். நாட்டில் மூவின மக்களும் இன்று நிம்மதியுடன் வாழுகின்றார்கள் என்றால் அது ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் தான் நடக்கும். இரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன்
இலங்கை  நாட்டிற்கு கிடைத்த நல்லொரு தலைவர் ரனில் விக்ரமசிங்க நாடு பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்த வேளையில் துணிந்து நாட்டை பொறுப்பேற்று இன்று நாம் அத்தியாவசிய பொருட்களை  வரிசையில் நிற்காமல் விலைகள் கூடியிருந்தாலும் பொருட்கள் உணவு வாங்க க்கூடிய வகையில் நாட்டை கொண்டு வந்துள்ளார். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கும் அவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என நான் உறுதிப்பட தெரிவிக்கின்றேன். தற்போது உள்ள ஜனாதிபதி நாட்டைக் காப்பாற்றுவதுடன் மக்களையும் வாழ வைத்து தான் அவருக்கு பழக்கம். நாட்டில் மூவின மக்களும் என்று நிம்மதியுடன் வாழுகின்றார்கள் என்றால் அது ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் தான் நடக்கும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்க தான் வெற்றி பெறுவார். நாட்டில் உள்ள பிரச்சனைகளை தற்போது அவர் தீர்த்து வருகின்றார் எனவே அவருக்கு மீண்டும் ஒரு ஐந்து வருடங்கள் கொடுப்பது முக்கிய மான தாகும்   இலங்கைக்குள் ஒரு சமாதான  வாழ்வை உருவாக்க வேண்டுமானால் நாம் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்
 இலங்கை திருநாட்டில் சகல இடங்களிலும் சகல இன மக்களும் நிம்மதியுடன் ஒற்றுமையாக  பாதுகாப்புடன் வாழ்வதற்கு தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்ரம சிங்கவே காரணம் தமிழ் மக்கள் அவரது கரங்களை பலப்படுத்து வதோடு இன்னும் ஐந்து வருடங்கள் அவருக்கு வழங்கி நாட்டை பழமையான நிலைக்கு கொண்டு வர நமது கட்சியானது அவருக்கு தொடர்ந்தும் ஆதரவினை வழங்க உள்ளது என இரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்