மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடாத்தப்பட்டது

 






















































சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால்  பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில்  "புகையிலை உற்பத்தி நிறுவனத்தின் தலையீட்டிலிருந்து நமது பிள்ளைகளையும் இளைஞர்களையும் பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு சமுர்த்தித் திணைக்களம்,தொழில் சார் உளவியல் உள வளத்துணை நிலையம்( PPCC ) மற்றும் திருப்பெருந்துறை லிட்டில் ஸ்டார் சிறுவர் கழகம் என்பன அனுசரணை வழங்கியிருந்தனர்.இவ் விழிப்புணர்வு நிகழ்வானது   பேரணியாக பிரதேச செயலகத்திலிருந்து மத்திய வீதியூடாக காந்தி பூங்காவை அடைந்தது. அத்துடன் காந்தி பூங்காவில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர்  அழகியல் கற்கைகள்   நிறுவகத்தின் விரிவுரையாளர் திரு க.மோகனதாஸ் அவர்களின் நெறியாள்கையில் "ஆடல் நிலம் வழங்கும் விரல் இடுக்கில் கசியும்உயிர்" எனும்   வீதி நாடகமும் பல்கலைக்கழக மாணவர்களால் அளிக்கை செய்யப்பட்டது.  இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர்  பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மற்றும் தொழில் சார் உளவியல் உள வளத்துணை நிலையம்( PPCC ) மாவட்ட திட்ட உத்தியோகத்தர்  மற்றும் அந்நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், திருப்பெருந்துறை லிட்டில் ஸ்டார் சிறுவர் கழக உறுப்பினர்கள்,பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் சிறுவர் பெண்கள் பிரிவு ,  சமூக சேவை கிளை  மற்றும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் ஒழுங்குப்படுத்தி இருந்தனர்.
 அழகியல் கற்கைகள்   நிறுவகத்தின் மாணவர்களுக்கும் ,லிட்டில் ஸ்டார் சிறுவர் கழக உறுப்பினர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன .